ஆப்பிரிக்கா கண்டத்தில் கொரோனா இறப்புகள் 1,000 கடந்த நிலையில், உணவு தட்டுப்பாடால் முக்கிய நகரங்களில் பொதுமக்கள் கலவரத்தில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.
கேப் டவுனில் கலவரக்காரர்களை ஒடுக்க ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உணவு விற்பனை நிலையங்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 1,000 கடந்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தில் மொத்தமுள்ள 54 நாடுகளில் கொரோனா பாதிப்பு இதுவரை 52 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பாதிப்புக்கு இலக்கானவர்களின் மொத்த எண்ணிக்கை 19,800 என தெரியவந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க மார்ச் 27 முதல் 5 வார காலத்திற்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான மக்கள் தினக்கூலி என்பதால், இந்த ஊரடங்கு நடவடிக்கை கடும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் உணவுக்கு கை ஏந்தும் நிலையும் ஆப்பிரிக்காவில் காணப்படுகிறது. இதனால் தொண்டு நிறுவனங்கள் பல உணவு பொட்டலங்களை தற்போது விநியோகம் செய்து வருகின்றனர்.
அரசு சார்பிலும் உணவு பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை என்றே கூறப்படுகிறது.
இதனாலையே பல நகரங்களிலும் கலவரங்கள் வெடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே நைஜீரிய ஜனாதிபதியின் முக்கிய ஆலோசகர் ஒருவர் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.