கொரோனா தொற்றுக்கு பின்னர் இடைநிறுத்தப்பட்டிருந்த தபால் சேவைகள் மீண்டும் ஆரப்பிப்பதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி நாளை (21) முதல் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத பகுதிகளில் தபால் சேவைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தற்போதைய நிலைமை சாதாரண நிலையை எட்டும்வரை தபால் பொதிச் சேவைகளில் தாமதம் ஏற்படுமெனவும் குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளதோடு, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து இல்லாததன் காரணமாக மீள் அறிவிப்பு வரும் வரை வெளிநாட்டு அஞ்சல் பொருட்கள் தபால் நிலையங்கள் மூலம் ஏற்றுக்கொள்ளப்படாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள போதிலும் பெரும்பாலான பகுதிகளில் குறைந்தளவிலான மக்களே நகரங்களுக்கு வந்துச் செல்வதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவித்தனர்.