நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டுள்ள நிலையில், இதுக்குறித்த ஆராய்ச்சியும் ஒருபக்கம் சென்று கொண்டுள்ளது.
ஆகவே கொரோனா வைரஸ் பற்றிய புதிய தகவல்களையும் அவ்வப்போது நிபுணர்கள் வெளியிட்டு வருகின்றனர்.
அந்த தகவலில் கொரோனா வைரஸின் அறிகுறிகளும் அடங்கும்.
கொரோனா அறிகுறிகள்
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள், அதிக காய்ச்சல், வறட்டு இருமல், தொண்டை புண் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளைக் காட்டுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதன் பின் சுவையின்மை மற்றும் வாசனை எதுவும் தெரியாமை போன்ற சில புதிய கொரோனா அறிகுறிகள் நோயாளிகளுக்கு இருப்பது மற்றொரு ஆய்வுகளில் தெரிய வந்தது.
காலில் தோல் புண்கள்
கொரோனா வைரஸலால் பாதிக்கப்பட்ட சில நோயாளிகளுக்கு காலில் தோல் புண்கள் ஏற்படக்கூடும் என்பதாகும்.
ஸ்பானிஷ் தோல் மருத்துவர்கள்
ஸ்பானிஷ் தோல் மருத்துவர்களின் கூற்றுப்படி, ஊதா நிற கால் புண்கள் கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் உள்ள மருத்துவர்கள் இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற பிற அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பு கொரோனா நோயாளிகளுக்கு கால்களில் தோல் புண்கள் வந்திருப்பதைக் கவனித்துள்ளனர்.
வழக்கு அறிக்கை என்ன செல்கிறது?
சர்வதேச போடாலஜிஸ்டுகள் கூட்டமைப்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அது, கொரோனாவால் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுவன் ஆரம்பத்தில் கால் தோல் புண்களால் பாதிக்கப்பட்டு, பின்னர் கொரோனா வைரஸின் இதர அறிகுறிகள் தெரிய வந்துள்ளது. இந்த சிறுவனுக்கு 38.5 °C காய்ச்சல், தசை வலி, தலை வலி மற்றும் கடுமையான அரிப்பு மற்றும் கால்களில் எரிச்சலூட்டும் புண்கள் இருந்தது. கால் புண்ணானது 5-15 மிமீ விட்டத்தில் புண்ணானது பரவி ஊதா நிறத்தில் இருந்தது.
ஆய்வுகள் என்ன சொல்கிறது?
இத்தாலியில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளின் குழுவில், ஐந்தில் ஒரு பங்கு நோயாளிகளுக்கு தோல் பிரச்சனைகள் இருப்பது தெரிய வந்தன. அதில் 88 COVID-19 நோயாளிகளில் 20.5 சதவீதம் தோல் பிரச்சனைகளும், 44 சதவீத நோயாளிகளுக்கு கொரோனா அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்னரே தோல் புண்கள் ஏற்பட்டுள்ளதும் தெரிய வந்தது. மீதமுள்ள 78 சதவீதத்தினர் சருமத்தில் சிவப்பு தடிப்புக்களை கொண்டிருந்தனர்.
கொரோனா வைரஸ் மற்றும் கால் புண்
இருப்பினும் கொரோனா வைரஸ் மற்றும் கால் புண்களுக்கு இடையிலான தொடர்பை உறுதிப்படுத்த மேலும் அறிவியல் சான்றுகள் தேவை. ஆகவே தினமும் சருமத்தை சுய பரிசோதனை செய்து கொள்வதோடு, சருமத்தில் திடீரென்று அசாதாரண மாற்றங்கள் ஏற்படுவது போல் தெரிந்தால், சற்றும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும் என சுகாதார நிபுணர்கள் மக்களுக்கு பரிந்துரைக்கின்றனர்.