தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் இரசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவருமாகிய சாணக்கியன் அவர்களும், மன்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினருமான வினோராஜ் அவர்களும் சாராயம் கடத்தி கைது செய்யப்பட்டு 3 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது…
இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் நிவாரணப் பணிகளுக்காக கொழும்பிலிருந்து அரிசி கொண்டு வருவதற்காக அனுமதி பெறப்பட்டுள்ளது.
அரிசி மூடைகளுக்குள் சாராயப் போத்தல்களைப் பதுக்கி கொண்டுவரும் வழியில் பொலன்னறுவையில் வைத்து பொலிசார் சோதனைக்குட்படுத்தியபோது பெருமளவு சாராயப் போத்தல்கள் அரிசி மூடைகளுக்குள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு சாணக்கியனையும், வினோராஜ் அவர்களையும் கைது செய்த பொலிசார் விழக்கமறியலில் வைத்து பொலன்னறுவை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வினோ என்பவர் அவுஸ்ரேலியாவிற்கு ஆட்களைக் கடத்தியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொரோனா காலத்தில் மக்கள் ஒரு வேளை சோற்றிற்கு துன்பப் படும் காலத்தில் சாணக்கியன் பாராளுமன்றத் தேர்தலிற்கு சாராயப் போத்தல்களைப் பதுக்க நினைப்பது எவ்வளவு இழிவான செயல் என மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.