யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவியமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கொரோனா அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையில் அங்கு 18 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் பரவ சுவிஸில் இருந்து வந்த கிறிஸ்தவ மதபோதகர் போல் சற்குணராஜாவே காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர் மீண்டும் இலங்கைக்கு வந்தால் கைது செய்யப்பட கூடும் எனவும் அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
யாழ்.மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட 17 நோயாளர்களுக்கும் சுவிஸ் போதகர் ஊடாகவே தொற்று ஏற்பட்டிருந்தது.
வேறு வழிகளில் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி அவர்களும் அண்மையில் கூறியிருந்தார்.
இந்நிலையிலேயே, குறித்த் சுவிஸ் போதகர் போல் சற்குணராஜா இன்று தன்னிலை விளக்கம் ஒன்றை காணொளி ஊடாக வழங்கியிருந்தார்.
இதன்போது அவர் பல்வேறு விடயங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், அவர் கூறியிருக்கும் விடயங்களை நாம் பகுத்து ஆய்வு செய்யவேண்டியுள்ளது. அப்படி பார்க்கும் போது அவர் தனது தன்னிலை விளக்கத்திலும் பொய்யான விடயங்களையே கூறியிருப்பது உறுதியாகியுள்ளது.
அவரின் கூற்றின்படி, தான் இலங்கைக்கு வரும் போதும், திரும்பி சுவிட்ஸர்லாந்திற்கு செல்லும் போதும், கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், இதன் போது தான் முழு ஆரோக்கியத்துடனேயே இருந்ததாக கூறியுள்ளார்.
அத்துடன், தான் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட போதனையிலும், சுகாதார முறைமைகளை கையாண்டதாகவும், சுமார் 20 நிமிடங்கம் மட்டுமே அங்கு தங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
எனினும், இது முற்றிலும் பொய்யான விடயம் என தெரிவிக்கப்படுவதுடன், அவர் மிக நீண்ட நேரம் குறித்த ஆராதனை நிகழ்வில் இருந்துள்ளதாக தற்போது உறுதியாகியுள்ளது.
அத்துடன், அவர் குறித்த ஆராதனை நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போது கடும் காய்ச்சலுடன் இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், குறித்த போதகர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிய நிலையில், சுவிட்ஸர்லாந்தில் சிகிச்சை பெற்றமை குறித்து வடமாகாண ஆளுநர் அவர்கள் அரசாங்கத்தின் ஊடாக அறிக்கை ஒன்றை பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவ்வாறான நிலையில், குறித்த சுவிஸ் போதகர் தன்னை நியாயப்படுத்தி கருத்து வெளியிடுவது எந்த வகையில் நியாயம் என பலரும் கேள்வியெழுப்பியுள்ளனர்.
எவ்வாறாயினும், தன் மீதான குற்றத்தை மறைக்க குறித்து சுவிஸ் மதபோதகர் கடவுளை காரணம் காட்டுவது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.