மஞ்சள் தூளுக்கு உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன்படி ஒருகிலோ மஞ்சள் தூளின் உச்சபட்ச சில்லறை விலை 750 ரூபாவாகும்.
நுகர்வோர் அதிகார சபை இதனை அறிவித்துள்ளது.
கொவிட்-19 தொற்று பரவலை அடுத்து சந்தையில் மஞ்சள் தூளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், வௌ;வேறு விலைகளில் விற்கப்பட்டு வருவதாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய இந்த விலை நிர்ணயம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மீறி அதிக விலைக்கு மஞ்சள் தூளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.


















