இலங்கையில் கொரோனா தொற்று இனி மக்கள் மத்தியில் பரவாது என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று அளித்துள்ளார்.
ஹோமாகம வைத்தியசாலைக்கு இன்று களவிஜயத்தை மேற்கொண்ட அவர் அதன்பின் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.
கொரோனா வைரஸ் சந்தேக நபர்கள் அனைவரும் படையினரால் நடத்தப்படும் தனிமைப்படுத்தும் முகாம்களில் உள்ளதாகவும்,அவர் கூறினார்.
மேலும் நாளைக்கேகூட நாட்டு மக்கள் வழமைபோல செயற்படுவதற்கான அனுமதியை வழங்கலாம் என்றும் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இதன்போது தெரிவித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


















