நாடாளுமன்றத்தை ஜனாதிபதியினால் மாத்திரமே கூட்டுவதற்கு முடியும் என அமைச்சரவைப் பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை அவர் கொழும்பில் சற்றுமுன் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அத்துடன் அவசர காலச் சட்டநிலை மத்தியில் மாத்திரமே நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் என குறிப்பிட்ட அமைச்சரவைப் பேச்சாளர், தற்போதைய நிலைமைக்கு மத்தியில் நாடாளுமன்றத்தை கூட்ட வாய்ப்பில்லை எனவும் அவர் கூறினார்.