உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் கைது செய்யமுடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் கம்பஹா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராகிய சட்டத்தரணி உதயகம்மன்பில தெரிவிக்கின்றார்.
தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் இந்தப் பதிவை இட்டுள்ளார்.
அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,
ஏன் ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரியை கைது செய்யமுடியாது என்று கேட்கின்றனர். அரசியலமைப்பின் 35இன் முதலாவது பிரிவில் உள்ளபடி முன்னாள் ஜனாதிபதி என்கிற சிறப்புரிமையினால் அவரைக் கைது செய்ய முடியாது என உதயகம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, அண்மையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன, ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி குறித்து இதுவரை எந்த விசாரணையும் இடம்பெறவில்லை என கூறியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.