மேல் மாகாணம் வெலிசர கடற்படை முகாமில் கடமையாற்றும் 29 கடற்படை சிப்பாய்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை இராணுவத் தளபதியும் கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவருமான லெப். ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதன் காரணமாக குறித்த கடற்படை முகாம் முடக்கப்பட்டுள்ளதுடன் அங்கு கடமையாற்றும் கடற்படை அதிகாரிகள் உள்பட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அந்த முகாமில் கடமையாற்றிய கடற்படைச் சிப்பாய் ஒருவர் பொலநறுவை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் அவருக்கு கோரோனா உள்ளமை நேற்றுக் கண்டறியப்பட்டதனால் அந்த முகாமில் கடமையாற்றும் கடற்படையினருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதில் முதல்கட்டமாக மேலும் 29 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று இரவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் அந்த முகாமில் கடமையாற்றிய 30 கடற்படைச் சிப்பாய்களுக்கு கோரோனா உள்ளமை இதுவரை கண்டறியபட்டுள்ள நிலையில் நாட்டில் கோரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 368ஆக அதிகரித்துள்ளது.