அத்தியாவசிய பொருட்களை வேறு மாகாணங்களுக்கு எடுத்துச் செல்வதை தடுக்கும் நோக்கில் ஒவ்வொரு மாகாண எல்லைகளிளும் 262 க்கும் அதிகமான வீதி தடைகளை அமைத்துள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
அதேபோல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் உரியய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாதவர்களை கைது செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொலிஸ்மா அதிகாரம் அதிகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
21 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சுகாதார தரப்பினர் வழங்கியுள்ள பரிந்துரைகளை மீறும் வகையில் செயற்பட்ட பயணிகள் போக்குவரத்து பஸ்களை பொலிஸார் பரிசோதனைக்கு உட்படுத்தினர்.
முச்சக்கர வண்டிகளில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த உத்தரவை மீறி செயற்பட்டவர்கள் பொலிஸாரால் எச்சரிக்கப்பட்டனர்.