வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்தும் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
யுனெஸ்கோ அமைப்பில் செல்வாக்கு செலுத்தும் நாடுகளின் அரச தரப்பினருடனான காணொளி கலந்துரையாடலின் போதே அவர் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“அனைத்து தரப்பினரும் பாரிய சவால்களை எதிர்க்கொண்டுள்ள நிலையில் அனுபவங்களை ஒவ்வொரு தரப்பினருக்கிடையில் பரிமாற்றிக் கொள்வது மகிழ்வுக்குரியது.
இலங்கையின் தேசிய பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறை நேரடி பங்களிப்பு செலுத்துகின்றது. 2018ம் ஆண்டு சுற்றுலாத்துறை அபிவிருத்தி ஊடாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் கிடைக்கப் பெற்றது.
துரதிர்ஷ்டவசமாக 2019ம் ஆண்டு நாட்டில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதலின் காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையிலேயே, வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையினை மீள கட்டியெழுப்புவதற்கு அனைத்தும் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென பிரதமர் மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.