பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் எப்போது பணிக்கு திரும்புவார் என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறினார்.
நான் நேற்று பிரதமரிடம் பேசினேன், அவர் நல்ல நிலையில் இருக்கிறார். அவருடைய மருத்துவர்கள் பரிந்துரைத்தவுடன் அவர் திரும்பி வருவார் என்று நான் நம்புகிறேன் என ஹான்காக் கூறினார்.
அவர் பணிக்கு திரும்புவது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை, ஆனால் பிரதமர் தொலைபேசி அழைப்புகளை எடுத்து தொடர்பில் இருக்கிறார் என கூறினார்.
ஜான்சன் இந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரித்தானியா ராணியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார்.
பிரித்தானியா உள்ளுர் ஊடகங்கள் திங்கட்கிழமை முதல் பிரதமர் பணிக்கு திரும்புவார் என செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் டவுனிங் ஸ்ட்ரீட் தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்ட போரிஸ் ஜான்சன், பிரதமரின் கிராமப்புற செக்கர்ஸில் தொடர்ந்து ஓய்வெடுத்து வருகிறார்.