தமிழகத்தில் திருமணமான ஏழு மாதத்தில் புதுப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், அவரின் தலையில் ரத்தக் காயம் இருந்ததால், மகளின் சாவில் மர்மம் இருப்பதாக கூறி பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப் பூண்டை அடுத்துள்ள தேர்வாய் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக். விவசாயியான இவருக்கு, அதே பகுதியை சேர்ந்த 28 வயது மதிக்த்தக்க சுனிதாகவுக்கும் 7 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு திடீரென்று சுனிதா வீட்டில் பிணமாக தொங்கினார். இதைக் கண்ட கார்த்திக் குடும்பத்தினர், உடனடியாக புனிதாவின் பெற்றோருக்கு தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வரும் போது, சுனிதா தூக்கு கயிற்றில் இருந்து இறக்கப்பட்டு, தரையில் வைக்கப்பட்டிருந்தார். அப்போது மகளின் உடலை பிடித்து பெற்றோர் அழுத போது, அவரது தலையில் ரத்த காயம் இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் உடனடியாக அருகில் இருக்கும் பாதிரிவேடு காவல்நிலையத்தில், புகார் கொடுத்துள்ளனர். அப்போது அவர்கள், இது வரதட்சணை பிரச்சனைக்காக ஏற்பட்ட கொலையாக இருக்கலாம் என்று காவல்நிலையத்தில் கண்ணீர் மல்க கூறியுள்ளனர்.
திருமணத்தின் போது தேவையான் சீர்வரிசை பொருட்களை கொடுத்தோம். ஆனால் திருமணம் முடிந்த ஒரு மாதத்திலே
இன்னும் அதிகமாக வரதட்சணையை கார்த்திக் குடும்பத்தினர் கேட்டனர்..
அப்போதே எங்கள் வீட்டுக்கு மகளை அனுப்பி வைத்துவிட்டனர். நாங்கள்தான் சமாதானம் செய்து சுனிதாவை மாமியார் வீட்டுக்கு அனுப்பி வைத்தோம். அங்கு சென்றும் பிரச்சனை ஓயவில்லை. வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்தி உள்ளனர்.
இதனால் கார்த்திக் குடும்பத்தினர் தான் எங்கள் மகளை அடித்து கொன்றுவிட்டு, உடலை தூக்கில் தொங்கவிட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகம் உள்ளதால், இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.
இதையடுத்து சுனிதாவின் உடலை கைப்பற்றிய பொலிசார் பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் பிரேத பரிசோதனையின் முடிவு வந்த பின்னர் முழு உண்மை தெரியவரும் என்பதால், பொலிசார் இது குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.