வட கொரிய தலைவர் கிம் ஜாங் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது குறித்து அமெரிக்க டொனால்டு டிரம்ப் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
வட கொரியா தலைவர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை.
கடந்த 15-ம் திகதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது.
சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அமெரிக்க உளவுத்துறையும் இதை தீவிரமாகக் கண்காணித்து வருகிறதாக செய்திகள் வெளியாகின.
40 வயதுக்குள் இருக்கும் அதிபர் கிம்முக்கு அதீதமான புைகப்பழக்கம், உடல் பருவமன், உடல்சோர்வு உற்சாகமின்மை, அதிக தூக்கம் ஆகியவற்றால் அவதிப்பட்டார். இதனால் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக தகவல் வெளியானது
இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் வடகொரிய தலைவர் குறித்த தகவல்களைக் கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:
கிம் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை. சிஎன்என் சேனல் தவறான அறிவிப்புகளை வெளியிடுகிறது. எனக்கு கிடைத்த தகவலின்படி அவர் உடல்நிலை குறித்த தகவல் பொய். அந்த சேனல் கடந்த கால ஆதாரங்களை வைத்து செய்தி வெளியிட்டுள்ளார்கள்.
மருத்துவ ரீதியாக கிம் உடல்நிலையில் எந்த பிரச்சினையும் இல்லை என நம்புகிறேன். அவர் நலமாக இருக்கிறார்.
அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் பல பிரச்சனைகள் தொடர்ந்து இருந்து வந்தன. நான் மட்டும் ஜனாதிபதியாக வரவில்லை என்றால் வடகொரியாவுடன் அமெரிக்கா போர் செய்திருக்கும் எனத் தெரிவித்தார்



















