ரஷ்யாவில் 10 வயது சிறுவனால் கர்ப்பமானதாக கூறியதையடுத்து பிரபலமான சிறுமியும், அந்த சிறுவனும், தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை இப்போது வெளிப்படுத்தியுள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த Daria என்கிற 14 வயது சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, Ivan என்ற தனது 10 வயது காதலனால் கர்பமடைந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, இணையதளவாசிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
இதனையடுத்து இருவரும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றில் தோன்றி, தங்களுக்குள் நட்பு உருவான விதம் மற்றும் காதல் குறித்து பேசினர்.
அப்போது அந்த 10 வயது சிறுவன், Daria கர்ப்பிணியாக இருப்பதற்கு நான் தான் காரணம் எனவும் கூறினான். இதையடுத்து இவர்களை சமூகவலைத்தளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை அதிகமானது.
தற்போது இவர்கள் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கும் என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பையனா அல்லது பெண்ணா? என்ற வார்த்தைகளுடன் இருக்கும் மிகப் பெரிய பலூனை Ivan உடைக்கிறார். இதில் நீலக் கலர் பலூன் என்றால் பையன், இளஞ் சிவப்பு பலூன் என்றால் பெண்(பெயர்களோடு) என்று எழுதப்பட்டிருந்தது.
அப்போது பலூன் உடைத்தவுடன் அதில் இருந்து இளஞ்சிவப்பு பலூன்கள் காற்றில் பறந்தன.
அதன் பின் இருவரும் ஒருவருக்கொருவர் கட்டியணைத்து முத்தமிட்டுக் கொண்ட பின், தங்களுக்கு பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும் என்று வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முன் Daria தான் 20 வார கர்ப்பிணியாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.
மேலும், Ivan-ஐ பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஒரு குழந்தை, அவனால் ஒரு குழந்தைக்கு தந்தையாக முடியாது என்று தெரிவித்திருந்ததும், Daria ஒரு இளைஞன் பாலியல் வன்புணர்வு செய்துவிட்டதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



















