இலங்கையில் நபர் ஒருவரிடம் கொரோனா வைரஸ் தொற்று காணப்படுகின்றதா என அடையாளம் காணும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கு 6000 ரூபாய்க்கு அதிகமாக செலவிடப்படுவதாக தெரியவந்துள்ளது.
தொற்று நோயியல் ஆய்வு பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதன் பமரவீர இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன் குறித்த பரிசோதனைகளுக்கு தனியார் வைத்தியசாலைகளின் உதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய நாளொன்றுக்கு 1000 பரிசோதனைகளை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுள்ளது.