இந்தியாவின் மத்தியபிரதேச மாநிலத்தில் கொரோனா தொற்று காரணமாக பலியான தந்தையை தகனம் செய்ய மகன் முன்வராத சம்பவம் நடந்தேறியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலத்தின் வருவாய்துறையில் பணிபுரிந்து வந்த அதிகாரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இதனையடுத்து அதிகாரியின் உடலை மனைவி மற்றும் மகன் சந்தீப்பிடம் அதிகாரிகள் ஒப்படைக்க முயன்றனர்.
ஆனால் தாய் மற்றும் மகன் இருவரும் கொரோனா தொற்றால் பலியானவர்களுக்கு செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தங்களுக்கு முழுமையாக தெரியாது என கூறி மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து அதிகாரிகள் தகனம் செய்ய அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அப்பகுதி தாசில்தார் குலாப் சிங் பாகேல் நகராட்சி ஊழியர்களின் உதவியுடன் இறுதிசடங்குகளை செய்தார்.
முன்னதாக ஊழியர்களுக்கு பிபிஇ உடைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அதிகாரியின் உடல் இந்து முறைப்படி தகனம் செய்யப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பாக சந்தீப் கூறுகையில், சொந்த ஊரான சுஜல்பூருக்கு தந்தையின் உடலை எடுத்துச் செல்ல நான் விரும்பினேன்,
ஆனால் சில பாதுகாப்பு காரணங்களால் என்னை அனுமதிக்கவில்லை. மேலும் எங்களது குடும்பத்தினருக்கு கொரோனா மாதிரி சோதனை எடுக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுக்காக காத்திருக்கிறோம் என கூறினார்.