சம்மாந்துறை, செந்நெல் கிராமத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளானர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த தொடர் விசாரணையின் அடிப்படையில் நேற்று மாலை மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான மூன்று சந்தேக நபர்களில் இருவர் குறித்த துப்பாக்கியை மறைத்து வைக்க ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையிலும் மற்றையவர் துப்பாக்கியை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டிலும் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் பிரதான சந்தேக நபர் உள்ளடங்குவதாகவும் குறித்த நபர் செங்கல்வாடி மற்றும் இறைச்சிக்கடை ஆகியவற்றின் உரிமையாளர் எனவும் பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதேவேளை, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் மற்றும் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்ட சந்தேக நபருக்கு சூட்டுபயிற்சி வழங்கியவர் உட்பட இருவர் ஏற்கனவே பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.