தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில், வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதாவர்கள் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாது, முகக்கவசம் அணியாது பாதுகாப்பற்ற வகையில் விற்பனை செயற்பாட்டில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், சுகாதார ஆலோசனைகளை பிற்பற்றாத அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றாதவர்கள் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸ் தலைமையகம் முன்னரே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.