நாட்டில் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டில் அடையாளம் காணப்பட்ட 416 ஆவது நபராக குறித்த பொது சுகாதார பரிசோதகர் பதிவாகியுள்ளார்.
நேற்றிரவு மேலும் மூவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 420 ஆக உயர்வடைந்துள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 49 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அதிகளவு கொரோனா தொற்றாளர்கள் ஒரே நாளில் கண்டறியப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
இந்த வாரம் உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 65 பேர் வெலிசர கடற்படை முகாமுடன் சம்பந்தப்பட்டவர்கள் ஆவார்கள்.
இதுவரை அடையாளம் காணப்பட்ட 420 கொரோனா தொற்றாளர்களில், 109 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன் 07 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.
அதேநேரத்தில் இவர்களுள் 304 கொரோனா தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் மேலும் 183 நபர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்ல் மருத்துவ கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.