இலங்கையில் கடந்த 3 நாட்களில் 100 கொரோனா வைரஸ் நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக கடந்த 11 நாட்களில் மட்டும் 200 நோயாளர்கள் இனங்காணப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
நேற்று மட்டும் இலங்கையில் 47 கொரோனா நோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
இதன்படி மொத்த நோயாளர்கள் தொகை 420 ஆக அதிகரித்துள்ளது.