கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் இருவர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 435ஆக அதிகரித்துள்ளது.
இன்று அடையாளம் காணப்பட்ட 15 பேரில் 7 பேர் கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் அனைவரும் கந்தக்காடு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் 118 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 310 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.