வடகொரிய அதிபர் கிம் ஜாங் நெஞ்சை பிடித்து கொண்டு கீழே சரிந்து விழுந்தார் எனவும், அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்த போது மருத்துவர்களின் கைகள் நடுங்கியதால் சிகிச்சை தவறாக சென்றதாகவும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
கிம் ஜாங் உன் உயிரிழந்துவிட்டார் மற்றும் அவர் மரண படுக்கையில் உள்ளார் எனவும் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அவர் உடல்நலக்கோளாறு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன்படி ஏப்ரல் மாத தொடக்கத்தில் கிம் ஜாங் நாட்டுக்குள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது நெஞ்சு வலியால் மார்ப்பை பிடித்து கொண்டு கீழே சரிந்து விழுந்துள்ளார்.
பின்னர் வடகொரியா மருத்துவர்கள் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்தனர்.
அப்போது இதயத்தின் இரத்தக்குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை திறக்க வைக்கப்படும் stent எனப்படும் சிறு குழல் கருவியை மருத்துவர்கள் கிம்முக்கு பொருத்தியுள்ளனர்.
அந்த சமயத்தில் மருத்துவர்களின் கைகள் நடுங்கியதால் சிகிச்சை தவறாக போனது என கூறப்படுகிறது.
அதிகளவிலான புகைப்பழக்கம், உடல் பருமன் மற்றும் குடும்பத்தாருக்கு இருந்த இதய நோய்கள் ஆகியவை தான் கிம்மின் உடல்நிலை மோசமடைய காரணம் என தெரியவந்துள்ளது.
கிம் ஜாங்கின் தந்தை கடந்த 2011ல் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது முக்கிய விடயமாகும்.
அதே சமயம் சீன மருத்துவர்கள் வடகொரியாவுக்கு விரைந்து சென்று கிம்முக்கு சிகிச்சை அளிக்கிறார்கள் எனவும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.