உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 400-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 15 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1 லட்சம் பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே தற்போதைய நிலவரப்படி உலகளவில் கொரோனா பாதிப்பு 28.67 லட்சமாக அதிகரித்துள்ளது.
கொரோனா விவகாரத்தில் ஆறுதல் அளிக்கக் கூடிய விவகாரம் என்னவென்றால் இதுவரை உலகம் முழுவதும் 8.19 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து நலம்பெற்றுள்ளனர்.
கொரோனாவுக்கு இதுவரை மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், குணமடைந்த அனைவருக்கும் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்ததால் இந்த நோயில் இருந்து அவர்களால் எளிதாக மீண்டு வர முடிந்தது.
அமெரிக்காவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் போதிய பலன் தரவில்லை என்ற செய்திகள் வெளியாகி வரும் நிலையில்,
மனிதர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் நடவடிக்கைகளில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.