கொரோனாவால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான இத்தாலியில், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும் என பிரதமர் Giuseppe Conte தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே முதல் வாரம் தொடங்கி உற்பத்தித்துறை மற்றும் கட்டுமானதுறை சார்ந்த பணிகள் செயல்பட அனுமதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் மதுபான விடுதிகள் மற்றும் உணவகங்கள் திறந்து செயல்பட கொஞ்சம் கால தாமதமாகலாம் என குறிப்பிட்டுள்ளார்.
மட்டுமின்றி பாடசாலைகள் அனைத்தும் செப்டம்பர் மாதம் வரை செயல்பட வாய்ப்பில்லை என தெரிவித்துள்ள அவர்,
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் இனி முழு கவனமும் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதி தொடர்பான நிறுவனங்களுக்கு உள்ளூர் அனுமதியுடன் செயல்பட இந்த வாரம் முதல் வாய்ப்பளிக்கப்படும் என்ற அவர்,
நிறுவனங்கள் திறந்து செயல்படுவதற்கு முன் கடுமையான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
கொரோனா பாதிப்புக்கு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியில் இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்கள் எண்ணிக்கை 26,000 கடந்துள்ளது.
மார்ச் 14 ஆம் திகதிக்கு பின்னர் ஞாயிற்றுக்கிழமை மட்டுமே 260 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
மட்டுமின்றி ஏப்ரல் 20-கு பின்னர் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் ஞாயிறன்று குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சனிக்கிழமை 415 என இருந்த இறப்பு எண்ணிக்கை ஞாயிறன்று பெருமளவு குறைந்துள்ளது நம்பிக்கை அளிப்பதாக பிரதமர் Giuseppe Conte தெரிவித்துள்ளார்.