நாடுமுழுவதும் நாளை ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கங்கானது நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை வரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுமுறையில் சென்றுள்ள பாதுகாப்புப் படையினர் மீண்டும் முகாம்களுக்குத் திரும்புவதற்கு ஏதுவாக இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.