ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கு தேவையான நிதி திறைசேரியில் உள்ளது என்று நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.அட்டிகல்லே தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக்கொடுப்பனவுகளான சிறப்புத் தேவையுடையோர், சிறுநீரகம், சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவு ஆகியவற்றையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஊழியர்களின் சம்பளம் மே 25ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, ஊரடங்கு உத்தரவு தொடரும் மாவட்டங்களில் தபால் நிலையங்கள் திறக்கப்படுவது குறித்து நாளை கலந்துரையாடப்படும்.
தபால் நிலையங்கள் மீண்டும் திறக்கப்படுவது குறித்து ஜனாதிபதி செயலணிக்கு தகவல் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.