கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 10 பேர் இன்று மாலை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட அனைவரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 567ஆக அதிகரித்துள்ளது.
126 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 434 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.