தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் கொரோனா தொற்றால் 92 வயது மூதாட்டி குணம் பெற்றுள்ளார்.
இந்த நிலையில், அவரது இளைய மகன் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளார்.
பொகோட்டாவிற்கு வடக்கே உள்ள சூஸ்கா நகரத்தைச் சேர்ந்த ஜோவாகினா கார்சன் என்ற மூதாட்டியும் அவரது மகன் மற்றும் 54 வயது பேரன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ள ஜோவாகினாவும் அவரது பேரனும் குணம் பெற்று வீடு திரும்பினர்.
இதன்போது அவர்களுக்கு கைகளை தட்டி உற்சாகத்துடன் மருத்துவ ஊழியர்கள் வழியனுப்பி வைத்தனர்.