பாரிஸ் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்ற பொலிசார் இருவரை இளைஞர் ஒருவர் தமது வாகனத்தால் மோதி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பஸின் வடக்கு புறநகர் பகுதியில் பட்டப்பகலில் நடந்த இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐ.எஸ் ஆதரவாளர் என சந்தேகிக்கப்படும் 29 வயது இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
திங்களன்று மாலை சுமார் 5.30 மணியளவில் நடந்த இக்கொடூர சம்பவத்தில் காயமடைந்த இரு காவலர்களில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தனது பெயர் யூசெப் என கூறிய அந்த இளைஞர், ஐ.எஸ் தீவிரவாதிகளுக்காக குறித்த தாக்குதலை முன்னெடுத்தாக பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
கொலம்பஸில் உள்ள அவரது வீட்டிலும் அவரது காரிலும் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனையில் பயங்கரவாத நோக்கங்களுடன் அவரது நடவடிக்கையை விளக்கும் கடிதத்தையும், கத்தி ஒன்றையும் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.
பாரிஸ் பகுதியில் உள்ள உயர் பாதுகாப்பு காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லும்பொருட்டு குறித்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
முதலில் இருசக்கர வாகனம் ஒன்றில் பொலிசாரை திசைத்திருப்பும் வகையில் நபர் ஒருவர் சாலை வழியாக விரைந்ததாகவும்,
ஊரடங்கு என்பதால், சாலையில் கண்காணிப்பில் இருந்த பொலிசார் அந்த நபரை துரத்திச் சென்றதாகவும்,
ஆனால் அவர் அந்த இருச்சக்கர வாகனத்தை விட்டுவிட்டு மாயமானதாகவும், அதன் பின்னரே கருப்பு நிற BMW ஒன்று பொலிசாரை துரத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.