எம்மவர்களின் மருத்துவ தேவைகளுக்கு எம்மவரான வைத்தியர் DR.கஜரூபன் அவர்கள்…!
புளோமினில்,சென்ரனீஸ்,லாக்குறோநெவ் ஆகிய இடங்களில், மருத்துவம் என்பதன் மகத்துவம் இவரின் சேவையின் மூலம் எம்மின மக்கள் பலரும் அறிந்திருப்பர்.
ஆனாலும் எமது புளோமினில் நகருக்கு இவரின் வருகையும் அதன்பால் எம்மக்கள் பெறும் நன்மைகளும் அளப்பரியது.
இன்றைய கொரோனா வைரசின் தாக்கம் எம்மவர்களையும் விட்டு வைக்கவில்லை பலர் இவ்நோயின் ஆரம்ப தொற்றின் போதே இவரின் மருத்துவ சேவையினால் பூரணமாக குணமடைந்தனர்.
என்பது பெரும் மகிழ்ச்சி நோயாளர்களோடு பழகும் விதமும் அவர்களுக்கு நோய் தொற்று சம்பந்தமான பீதிக்கு அன்பாகவும் ஆதரவாகவும் அவர் கூறும் ஆலோசனைகள் மிகவும் தரமானது.
எம்மினத்தின் மீதும் தேசத்தின் மீது பாரிய அக்கறையுள்ள வைத்தியர். திரு. கஜரூபன் அவர்கள் சிறுவயதில் புலத்தில் தடம்பதித்து இன்று ஒரு வைத்தியராக பல்லினமக்களுக்கும் சேவை செய்யும் ஓர் ஈழத்தமிழன் என்பதில் எமக்கும் பெருமையே.
கொரோனாவின் தாக்கத்தால் எமது உறவினர் ஒருவர் கோமா நிலையில் இருந்த போது வைத்தியர் எம்மோடும் அவர் குடும்பத்தோடும் பகிர்ந்த வைத்திய ரீதியான தகவல்கள் யாவும் எமக்கு நம்பிக்கையை மட்டும் அல்ல அவரது கூற்றுகள் யாவும் மெய்யாகியது என்பது உண்மை.
பிரெஞ்சு மொழியில் உரையாட முடியாத எம்மவர்களுக்கு இவரது சேவை இன்றியமையாத ஒன்றாகி போனது இன்றைய கொரோனாவின் தாக்கம் உச்சம் பெற்ற வேளையில் இவரது பல சேவைகள் பற்றிய தகவல்கள் முடிந்தால் காணொளி வடிவில் தர முயல்கிறேன்.
இவரது மருத்துவ சேவையினை எம்மவர்கள் பெற்று கொள்ளக்கூடிய வகையில் வைத்தியர். திரு. கஜரூபன் அவர்களின் சிகிச்சை நிலையங்கள் அமைந்திருக்கும் முகவரிகள் ,திறந்திருக்கும் நாட்கள், நேரம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பனவும்,
Dr KAJAROOBAN
செவ்வாய்&வியாழன் ஆகிய இரு தினங்கள்
(Mardi et jeudi )9h-17h
114 Rue Danielle Casanova, 93200 Saint-Denis
Tel: 01 48 20 16 94
புதன்கிழமை
(Mercredi)9h-17h
1 Villa des Rossignols
93150 Le Blanc-Mesnil
Tel: 01 70 83 63 97
சனிக்கிழமை
(Samedi)11h-14h
7 Avenue Pierre et Marie Curie, 93150 Le Blanc-Mesnil
01 48 67 16 21