கொழும்பிலுள்ள பிரபல பாடசாலைகள் சிலவற்றை இராணுவத்தினர் வசம் வழங்கியிருப்பதாக அரசாங்கம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் இன்று கொழும்பில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பொதுஜன முன்னணி முன்னாள் எம்.பி சுசில் பிரேமஜயந்த குறித்த விடயம் தொடர்பில் விளக்கம்ளித்துள்ளார்.
அதாவது சுதந்திரதின வைபவங்களில் பங்கேற்கும் படையினர் இப்படியான பாடசாலைகளில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் அது வழக்கம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோலவே இன்று அதிகளவான படையினர் கொரோனா தொற்று ஒழிப்பு செயற்பாட்டில் ஈடுபட்டிருக்கின்ற நிலையில் அவர்களைத் தங்கவைக்கவே மேற்படி பாடசாலைகள் பயன்படுத்தப்படுகின்றதாகவும் மாறாக கொரோனா தொற்று தனிமைப்படுத்தும் முகாம்களாக அல்ல எனவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.