குருநாகல் மாவட்டத்தில் கொரோனா வைரஸினால் பீடிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அந்தவகையில் அங்கு தற்போதுவரை 17 கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெலிசற கடற்படை முகாமில் நேற்றும், நேற்று முன்தினமும் நடந்த பி.சி.ஆர் பரிசோதனையில் இரண்டு சிப்பாய்களும், குருநாகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒரு சிப்பாயும் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியது.
இவர்கள் அலவ்வ, கொக்கரல்ல, பொல்கஹவெல இம்புல்கஸ்தெனிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகின்றது.