31 வருடங்களாக செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் வாகனம் ஓட்டி வந்த பேருவளை நகரசபை உறுப்பினர் ஒருவர் இன்று சிக்கியுள்ளார்.
பேருவளை- காலி வீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றின் அருகில், நகரசபை உறுப்பினரின் பி.எம்.டபிள்யூ காரை பொலிசார் வழிமறித்து சோதனையிட்டனர்.
வாகனத்தில் சட்டவிரோதமாக சிகரெட் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது. இதன்போது, வாகனத்தை செலுத்தி வந்த பேருவளை நகரசபை உறுப்பினர் 31 வருடங்களாக செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரமில்லாமல் வாகனம் ஓட்டிவரும் விடயம் வெளிச்சத்திற்கு வந்தது.
அவர் ஐ.தே.கவின் உறுப்பினராவார். அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.