நாடளாவிய ரீதியில் 233 படையினர் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று இரவு 7.00 மணி வரையிலான காலப்பகுதியில் பாதிக்கப்பட்டிருந்ததாக சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
226 கடற்படை வீரர்கள், 6 இராணுவ வீரர்கள் மற்றும் ஒரு விமானப்படை வீரர் என 233 பேரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதில் அடையாளம் காணப்பட்டுள்ள 226 கடற்படை வீரர்களும் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்தவர்கள் எனவும், அதில் 147 வீரர்கள் முகாமுக்குள்ளும் மேலும் 79 பேர் விடுமுறையில் வீடுகளுக்கு சென்றிருந்த போதும் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக,
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கை மையத்தின் தலைவர், முப்படைகளின் பதில் தலைமை அதிகாரி, இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்தார்.



















