அமெரிக்க போர் கப்பலை விரட்டியடித்த சீன இராணுவன், முதலில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் படி அறிவுரை வழங்கியுள்ளது.
சர்ச்சைக்குரிய தென் சீன கடல் பகுதியில் உள்ள பேரசல் தீவுகளுக்கு அருகே, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ்., பேர்ரி ரக போர்க்கப்பல் ஒன்று சென்றுள்ளது.
இந்த பகுதியை சொந்தம் கொண்டாடும் சீனா, தன் கடற்படை கப்பல்கள் மற்றும் போர் விமானம் மூலம், அமெரிக்க கப்பலை விரட்டியடித்துள்ளது.
இது குறித்து, சீன இராணுவ செய்தித் தொடர்பாளர் கூறுகையில், தென் சீன கடல் பகுதிக்குள், அமெரிக்க போர்க்கப்பல் நுழைந்தது, எங்களை ஆத்திரமடைய செய்துள்ளது.
சீன இறையாண்மையை மீறும் வகையில், இந்த செயல் அமைந்துள்ளது. பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளை கைவிட்டுவிட்டு, அமெரிக்கா, கொரோனா வைரசில் இருந்து, தங்களை காப்பாற்றுவதில் கவனம் செலுத்தட்டும் என்று குறிப்பிட்டுள்ளது.