உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ், சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத்தொடங்கியது. தற்போது 200-க்கு மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது. உலகம் முழுவதும் இதுவரை கொரோனா வைரசால் 3,220,225 பேர் பாதிப்படைந்துள்ளனர்
இந்த வைரசால் 228,223 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இதுவரை 1,000,351 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவில் தன் கோரத்தாண்டவத்தை காட்டி வருகிறது. தற்போது வரை அமெரிக்காவில் 61 ஆயிரத்து 656 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில், கொரோனா இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஏமனில் ஒரே ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் அவரும் குணமடைந்து வீடு திரும்பிவிட்டார். இதனால் கொரோனா இல்லாத நாடாக ஏமன் மாறியுள்ளது.




















