கொரோனா வைரஸ் தொற்றினை கட்டுப்படுத்த பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்கு நிலமை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் அனுமதிப்பதாக சட்ட மா அதிபர் பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவுக்கு அறிவித்துள்ளார்.
பதில் பொலிஸ் மா அதிபர், சட்ட மா அதிபரிடம் பொலிஸார் முன்னெடுத்த ஊரடங்கு நிலைமை மற்றும் கொவிட் 19 ஐ கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளின் சட்டபூர்வ தன்மை தொடர்பில் மேலதிக ஆலோசனை கோரியிருந்த நிலையிலேயே,
இன்று பொலிஸாரின் நடவடிக்கையை அனுமதித்து சட்ட மா அதிபர் பதில் அனுப்பியதாக சட்ட மா அதிபரின் செய்தித் தொடர்பாளர் அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.