ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலப்பகுதிக்குள் காலி மாவட்டத்தில் மட்டும் 30 திடீர் மரணங்கள் பதிவாகியுள்ளன.
கடந்த 30 நாட்களிற்குள் இந்த மரணங்கள் பதிவாகியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தகவலை காலி பொலிஸார் வெளியிட்டிருக்கின்றனர்.
ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தியதன் காரணமாக முறையான மருந்துகள் கிடைக்கும் வைத்தியசாலைகளின் இலவச மருத்துவ சேவைகளுக்காக செல்ல முடியாத நோயாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மரணித்தவர்களில் நீரிழிவுநோய், புற்றுநோய், இருதய நோய் மற்றும் சிறுநீரக நோய் ஆகிய பாதிப்புக்களை எதிர்கொண்டிருந்தவர்களே எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளார்.