பிரித்தானிய முதியவர் ஒருவர் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலையில், கொரோனா தாக்கிவிடுமோ என பயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
பர்மிங்காமில் வாழ்ந்து வந்த Dennis Ward (83) என்னும் முதியவர், ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலையில், தனிமை ஒரு புறம் வாட்ட, மறுபுறம் கொரோனா தாக்கிவிடுமோ என பயந்து தற்கொலை செய்துகொண்டதாக அவரது பேரன் James Parnaby என்பவர் தெரிவித்துள்ளார்.
Dennis தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக James தெரிவித்துள்ளார்.
அவர் எப்போதும் மகிழ்ச்சியாக காணப்படும் நபர் என்பதால் அவரது தற்கொலை அவரது குடும்பத்தாரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
வெளியில் அவர் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனிமையும், கொரோனா தாக்கிவிட்டால் அதற்குப்பிறகு வாழ்க்கை எப்படியிருக்கும் என்ற அச்சமும், அவரை இந்த முடிவை எடுக்கத் தூண்டியுள்ளது என்கிறார் James