கொரோனா வைரசுக்கு எதிராக போராடுவதில் தென் கொரியாவின் நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் அமெரிக்காவில் அதி தீவிரமாக பரவி வருகிறது, ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர்.
இதேவேளை தென் கொரியாவில் நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது, கடந்த ஜனவரி 20ம் திகதி கொரோனா தொற்று நோயாளி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் படுவேகமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டது.
குறிப்பாக உள்நாட்டிலேயே சோதனை கருவிகள் தயாரிக்கப்பட்டு மக்கள் அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதாவது நாள்தோறும் 20,000 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு ஆரம்ப அறிகுறிகளுடன் இருந்ததால் பெருந் தொற்று தவிர்க்கப்பட்டது.
இதுவே கொரோனாவுக்கு எதிரான போரில் தென் கொரியா எடுத்த முக்கிய நடவடிக்கையாகும்.
கடந்த 24 மணிநேரத்தில் தென் கொரியாவில் 4 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்கள் அனைவரும் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்கள்.
எனவே இந்நடவடிக்கையை உலக நாடுகள் பின்பற்ற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.