பிரதமர் மஹிந்த ராஜபக்ச விடுத்த அழைப்பை ஜே.வி.பி நிராகரித்துள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் அலரிமாளிகையில் முக்கிய கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
நாட்டின் தற்போதைய நெருக்கடிமிக்க சூழலில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்காக விடுக்கப்பட்ட கோரிக்கை ஒருபுறம் இருக்க, மறுபுறம் தேர்தல் குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து கலந்துரையாடவே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமர் மகிந்த ராஜபக்க்ஷ அழைத்திருக்கின்றார்.
இந்த நிலையில் அது தொடர்பில் பிரதமருக்கு அனுப்பியுள்ள ஜே.வி.பி, அதில் நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தேர்தல் குறித்து நீதிமன்றில் வியாக்கியானம் கேட்கப்பட வேண்டும் என்றும் தமது கடிதத்தில் கூறியுள்ளது.
அதோடு அர்த்தமில்லாத கூட்டத்தில் தம்மால் கலந்துகொள்ள முடியாது என்றும் காரசாரமாக பிரதமருக்கு கடிதம் மூலம் ஜே.வி.பி தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.