யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் நள்ளிரவு வேளையில் துவிச்சக்கர வண்டியில் முகமூடி அணிந்து வாள்களுடன் சென்ற நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டில் உள்ளவர்களை தாக்கி தங்க நகைகள் மற்றும் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களை களவாடி சென்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊரெழு பகுதியில் நள்ளிரவு வேளையில் மூன்று வீடுகளில் இந்த திருட்டு இடம்பெற்றுள்ளன.
துவிச்சக்கர வண்டியில் முகங்களை மூடியவாறு வாள்களுடன் வந்த இனந்தெரியாத 4 பேர் கொண்ட கும்பலே இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளது.
திருட்டு சம்பவத்தில் வீட்டின் உரிமையாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளதுடன் வீட்டில் இருந்த தங்க நகைகள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் களவாடப்பமரடுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.
கோப்பாய் பொலிசார் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.