களுத்துறை வெலிபன்ன பகுதியில் இன்று அதிகாலை ஒரு கிலோ ஹெரோயின் சகிதம் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களுத்துறை மடவள பகுதியில் வைத்து கார் ஒன்றில் எடுத்துச்செல்லப்பட்ட நிலையில் 700 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இதன்பின்னர் அவர்கள் விசாரணை செய்யப்பட்டபோது அவர்கள் வாடகைக்கு எடுத்திருந்த வீடு ஒன்றில் இருந்து 300 கிராம் ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
இதன்போது மூன்றாவது ஆள் கைது செய்யப்பட்டார். அத்துடன் கைத்துப்பாக்கி ஒன்றும் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் பண்டாரகம மற்றும் மொரட்டுவை பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.