மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட பெரிய மடு கிராமத்தில் ஏற்பட்ட மினி சூறாவளி தாக்கத்தினால் மூன்று வீடுகள் பாரிய அளவில் சேதமடைந்துள்ளது.
இதன் காரணமாக 4 வீடுகள் சேதமடைந்துள்ளதோடு, தோட்ட செய்கையும் பாதிப்படைந்துள்ளது.
அத்துடன் இடி,மின்னல் தாக்கத்துடன் கூடிய மழையினால் வீடு ஒன்று பகுதி அளவில் சேதமடைந்துள்ளது.
மேலும் குறித்த கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த பப்பாசி செய்கை முழுமையாக பாதிப்படைந்துள்ளதுடன் தோடு, பலாமரம்,வாழைமரம் போன்றன சேதமடைந்துள்ளது.
இந்த மினி சூறாவளியால் சுமார் 17 குடும்பங்கள் வரை பாதிப்படைந்துள்ள நிலையில் இன்று அங்கு சென்ற அதிகாரிகள் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.