நாட்டில் இன்று மேலும் 2 பேர் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 502 பேர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைபெற்று வருகின்றனர்.
அத்துடன் இதுவரை 157 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளனர்.
மேலும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இதுவரை இலங்கையில் 7 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.