நேற்று தொற்றுறதியானவர்களில் 5 பேர் கடற்படையினருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேலும் ஒருவர் கொழும்பு பகுதியை சேர்ந்தவர் என்பதோடு மேலும் 3 பேர் கடற்படையினர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் நேற்றைய தினம் வரையில் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 162 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் 521 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஒருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று அனுமதி;க்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, நாளான்றில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் பரிசோதனை எண்ணிக்கையை 6 ஆயிரம் வரையில் அதிகரிக்க வேண்டும் என தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவு தெரிவித்துள்ளது.