சென்னையில் பிறந்தநாளுக்கு கேக் வெட்ட காதலன் வராததால் பெண் பொலிஸ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (21), ரயில்வே பெண் காவலராக பணிபுரிந்து வந்தார்.
தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ஏழுமலைக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி வைத்துக் கொண்டு சரண்யா அயனாவரத்தில் வீடு அருகே காத்திருந்துள்ளார்.
ஏழுமலை அங்கு வராததால் சரண்யாவுக்கும், அவருக்கும் போனில் வாக்குவாதம் நடந்துள்ளது, இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சரண்யா துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி பொலிசார் சரண்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.