வெளிநாட்டுக்கு செல்லவில்லை என்று கூறி பெண் ஒருவரால் காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சம்பவம் ஒன்று வவுனியாவில் அரங்கேறியுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது…
வவுனியாவை சேர்ந்த யுவதி ஒருவருக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது இவர்கள் ஒருவருக்கொருவர் அன்பாகவும் உண்மையாகவும் இருந்துள்ளனர்.
காலங்கள் உருண்டோடின இவர்களது காதல் ஐந்து வருடங்களுக்கு மேலாக நீடித்து வந்துள்ளது.
அந்த இரண்டு காதல் பறவைகளும் தொலைபேசியிலே தங்கள் காதல் வாழ்க்கையை வாழ்ந்து வந்து கொண்டிருந்தனர்.
ஒரு நாள் குறித்த பெண்ணிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று அந்த இளைஞனுக்கு அதாவது காதலை இருவரும் கைவிடுவோம் எனவும் இப்படியே எத்தனை நாளைக்குத்தான் கதைச்சு கொண்டு இருக்கிறது என்று அந்த பெண் கூறியுள்ளாள்.
இதைக் கேட்ட அந்த இளைஞனுக்கோ பேர் அதிர்ச்சி என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தான்.
பின்பு நிலமையை சுதாகரித்துக்கொண்டு அந்த இளைஞன் கேட்டான் எதற்காக எங்கள் காதலை கைவிடவேண்டும் என்று.. அதற்கு அந்த பெண் நீ என்னை திருமணம் செய்யவேண்டுமானால் நீ வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் இல்லை எனின் என்னை மறந்து விடு என்று அந்த பெண் கூறினாள்.
இவ் விடயத்தை தாங்க முடியாத அந்த இளைஞன் எதற்காக என்னை இவ்வளவு நாள் காதலித்தாய் என கேட்டான் அதற்கு அந்த குறித்த பெண் தெரியாது என ஒரு வார்த்தையில் பதிலளித்தாள்.
இரு வரும் நீண்ட நேரம் தொலைபேசியில் விவாததித்தாலும் அந்த பெண் முடிவை மாற்றுவதாக தெரியவில்லை நான் உன்னை திருமணம் செய்து இலங்கையில் கஸ்டப்பட விரும்பவில்லை எனவும் தனது சகோதரர்கள் எல்லாம் வெளிநாட்டில் தான் இருக்கின்றார்கள் மேலும் எங்களுடைய குடும்பத்தில் உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் ஆனால் நீ வெளிநாடு சென்றால் நான் என் குடும்பத்துடன் பேசி திருமணம் செய்து கொள்கின்றேன் எனவும் இல்லவிட்டால் என்னை மறந்து விடு என்று அந்த அந்த இளைஞனிடம் தனது இறுதி முடிவை இறுக்கமாக தெரிவித்தாள் அந்தப் பெண்.
அந்த பெண்ணோ மறந்து விடு என தடித்த தனது குரலில் தெரிவித்து தொலைபேசியை துண்டித்தாள்.